'தி கேரளா ஸ்டோரி..' - திரைப்படத்தை பார்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்தப் படம் திரையிடப்படாது என தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டது.‌ இதையடுத்து உச்சநீதிமன்றம் இதற்கான தடையை அண்மையில் நீக்கியது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது மனைவி உடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் திரையரங்கில் தி கேரளா ஸ்டோரி படத்தை பார்வையிட்டார். இதற்காக உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com