"சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை..ஆளுநர் ரவி கூறியது முற்றிலும் உண்மை"

x

நாமக்கல் மாவட்டம் மல்லூரில் உள்ள தீம் பார்க்கில் கடந்த 11ஆம் தேதி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீதுள்ள வெறுப்பால் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக டிவிட்டரில் சாடிய ஆனந்த், இந்த விவகாரத்தில் ஆணையம் நடத்திய விசாரணை தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருவதாகவும், விரைவில் விசாரணை அறிக்கை ஆணைய தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்