"ஆளுநர் ரவிக்கும் சித்த மருத்துவத்துக்கும் - அப்படி என்ன சண்டையோ?"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு..!

x

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2021-ஆம் ஆண்டு சித்த மருத்துவ பல்கலைக்க மசோதா, பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். 4 மாதங்கள் மசோதாவை கிடப்பில் போட்டு விட்டு ஆளுநர் விளக்கம் கேட்டபோது, விளக்கம் கொடுக்கப்பட்டதாவும், அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் விளக்கம் கேட்டதாகவும் கூறினார். இரண்டாவது முறையாக விளக்கம் கொடுக்கப்பட்டும், ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை, சித்த மருத்துவ பல்கலைகழக மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கமால் இருக்கிறார் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார். எனவே, அந்த மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்