"பாதுகாப்பாக வசிக்க வீடு வழங்க வேண்டும்" - அமைச்சர் உதயநிதியிடம் மக்கள் கோரிக்கை

ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வை முடித்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டபோது, சாலையோரம் வசிக்கும் மக்கள், அமைச்சரின் காரை வழிமறித்து, தங்களுக்கு வீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். பல வருடங்களாக தாங்கள் சாலையோரம் வசிப்பதாகவும், பாதுகாப்பின்றி வாழ்ந்து வருவதாகவும் வேதனை தெரிவித்த அவர்கள், உடனடியாக வீடு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com