ஏழைகளுக்காகவே வாழ்வை அர்ப்பணித்த பிரபல டாக்டரை 11 முறை குத்தி கொன்ற 'சைக்கோ' - அரசு பள்ளி ஆசிரியர் ரூபத்தில் மனித மிருகம்

x

கேரளாவில் இளம் பெண் மருத்துவர் கைதியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் 23 வயதான இளம் பெண் மருத்துவர் வந்தனா தாஸ்...

சம்பவத்தன்று, கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்துள்ளார்...

மது போதை தகராறில் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியரால், பணியிலிருந்த வந்தனா தாஸ் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டு பேட்ச் ஆன வந்தனா தாஸ் தனது மருத்துவப்படிப்பை முடித்து வேலைக்கு சேர்ந்த முதல் வருடத்திலேயே பரிதாபமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்...

குடும்பத்திற்கு ஒரே மகளான நிலையில், மருத்துவராக்கி அழகு பார்த்த குடும்பம், மகளை இழந்து பரிதவித்து நிற்பது அனைவரையும் கலங்கடித்துள்ளது...

ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் தேடி தேடி மருத்துவம் பார்த்தனால் வந்தனா தாஸ் உள்ளூர் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர் என கூறப்படுகிறது....

மகளின் மருத்துவ படிப்புக்காக கோட்டயத்தில் இருந்து கொட்டாகரைக்கு குடிபெயர்ந்த குடும்பம், டாக்டர் வந்தனா என அவரது வீட்டில் மாட்டி வைக்கப்பட்ட பலகை, காண்போரின் நெஞ்சை ரணமாக்குகிறது...

மருத்துவர் வந்தனா தாஸின் தந்தையான தொழிலதிபர் மோகன் தாஸ், மகளின் உடம்பில் எந்தவொரு கீறலும் வராமல் வளர்த்த நிலையில், மகளின் மார்பிலும், வயிற்றிலும் கைதி ஒருவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தார் என்பதை அறிந்து படும் வேதனையை விவரித்துமாளாது...

மருத்துவர் மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் ஆர்வமும், அக்கறையும் கொண்டு சமூக ஆர்வலராகவும் வாழ்ந்து வந்த வந்தனா தாஸின் கனவு கைதியால் கலைக்கப்பட்டது பெரும் வேதனையான ஒன்று...

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதில், கைதியின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த வந்தனா தாஸை, எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் தலை மற்றும் காலில் கத்தரிக்கோலால் குத்தியதாகவும், பின்பு கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது...

இந்திய மருத்துவர் சங்கத்தின் கண்டிப்பு, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு என பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக களமிறங்கிய நிலையில், கேரளாவில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் அனைவரின் நெஞ்சையும் ரணமாக்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்