லஞ்சம் கேட்ட அரசு அதிகாரிகள்.. சிபிஐ எடுத்த கடும் நடவடிக்கை | bribes | CBI | Govt officers

சொத்துகளை மதிப்பீடு செய்ய லஞ்சம் கேட்ட வருமான வரித்துறை அதிகாரி மற்றும் ஆடிட்டர் என 2 பேரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

வானகரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சொத்தை மதிப்பீடு செய்வதற்கு மூன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் வருமானவரித்துறை மாவட்ட மதிப்பீட்டு அதிகாரி சஞ்சய் மற்றும் உதவி மதிப்பீட்டு அதிகாரி மஞ்சுநாதன், ஆடிட்டர் சத்குரு தாஸ், சொத்தின் உரிமையாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே இந்த சம்பவத்தில் வருமான வரித்துறை அதிகாரி மஞ்சுநாதன் மற்றும் ஆடிட்டர் சத்குருதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இருவரின் வீடுகளில் நடத்திய சோதனையின் போது லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com