விபத்தை பொய்யாக சித்தரித்த வழக்கு - "அரசு வழக்கறிஞர் குற்றவாளி" நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x
  • காங்கேயம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
  • ஆனால், லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக சித்தரித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
  • மேலும், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரித்தபோது, பொய் வழக்கு என தெரியவந்தால், வழக்குப் பதிவு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், வழக்கறிஞர் தங்கமணி, லாரி டிரைவர் மாணிக்கம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
  • விசாரணை காலத்தில் இன்ஸ்பெக்டர் சுகுமார் இறந்துவிட்ட நிலையில், லாரி டிரைவர் மாணிக்கம், வழக்கறிஞர் தங்கமணிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
  • இந்த தண்டனையை எதிர்த்து, அவர்கள் இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களின் தண்டனையை உறுதிசெய்தது.
  • இதையடுத்து, அரசு வழக்கறிஞர் பதவியை தங்கமணி ராஜிநாமா செய்து, திருப்பூர் ஆட்சியரிடம் கடிதத்தை கொடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்