"ஆட்சி தந்த கர்நாடக மக்கள்"... சோனியா காந்தி வெளியிட்ட வீடியோ

x

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்ததற்கு, கர்நாடக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள அரசு வளர்ச்சியின் பாதையில் பயணிக்கும் என தான் உறுதி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஐந்து உத்தரவாதங்களை முதல் அமைச்சரவையிலேயே ஒப்புதல் அளித்திருப்பதற்கு பெருமைப்படுவதாகவும் இந்த அரசு மாநில மக்களின் அமைதி, இணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு பாடுபடும் அரசாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்