கோவில் பந்தல் மீது மோதிய அரசு பேருந்து, கிளை மேலாளர் அலட்சிய பதில்..? மற்றொரு பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்..

கோவை அருகே பிரேக் பிடிக்காததால் கோவில் பந்தல் மீது பேருந்து மோதிய விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

கேரளாவில் இருந்து ஆனைகட்டிக்கு வந்தபோது நடந்த இந்த விபத்தில் கார் ஒன்று சேதம் அடைந்தது. பேருந்து விபத்துக்கு போக்குவரத்துத் துறை கிளை மேலாளர் அலட்சியமாக பதில் அளித்ததாக குற்றம்சாட்டி, மற்றொரு அரசுப் பேருந்தை மக்கள் சிறைப்பிடித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மலைப்பகுதியில் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com