மரியாதை குறைவாக நடத்திய...அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்...பயணிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவு

x

மரியாதை குறைவாக நடத்திய...அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்...பயணிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவு

பேருந்துக்குள் ஒழுகி வடிந்த மழைநீரால் அவதிக்குள்ளான பயணி தொடுத்த வழக்கில், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது, சிறப்பு நீதிமன்றம்.

கொட்டும் மழையில் அரசு பேருந்துக்குள் குடையுடன் பயணித்தவர்களை நாம் பார்த்ததுண்டு. மழைக்காலம் என்றால் ஏழைகளின் வீடு மட்டுமல்ல... அரசு பேருந்துகளும் ஒழுகுவது... தடுக்கப்படாத ஒன்றாகவே இன்றளவும் தொடர்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல அரசின் விரைவு பேருந்து சேவையான எஸ்.இ.டி.சி-ஐ நாடிய வழக்கறிஞருக்கு அது ஒரு மோசமான பயணமாக அமைந்தது.

சென்னைக்கு ஒரு அவசர வேலை காரணமாக அரசு விரைவு பேருந்தில் புறப்பட்ட வழக்கறிஞர் சோமசுந்தரத்திற்கு பேருந்துக்குள் நுழைந்ததுமே அதிருப்தி காத்திருந்தது.

அசுத்தமாக கிழிந்த நிலையில் இருந்த இருக்கையை கண்டு முகம் சுழித்தவரை , பாதி வழியிலேயே தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டது, அன்றிரவு பெய்த மழை. பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதே இதற்கு காரணம்.

உடனடியாக உள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தின் கதவை தட்டிய அவரது வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவரது பயணத்தொகையை திருப்பி கொடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, இழப்பீடாக ஐம்பதாயிரம் ரூபாயை வழங்குமாறும் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு முன்பு இதே போல் கடந்த மார்ச் மாதம், சென்னை யை சேர்ந்த மூத்த குடிமகனான அப்துல் அஜீஸ், தான் சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு செல்ல 9 டிக்கெட்கள் முன்பதிவு செய்தும், தனக்கும் தனது குடும்பத் தினருக்கு இருக்கை மறுக்கப்பட்டதோடு, தங்களை நடத்துனரும் ஓட்டுனரும் மரியாதை குறைவாக நடத்தியதாக வழக்கு தொடர்ந்திருந்தார்


Next Story

மேலும் செய்திகள்