"வீடு புகுந்து 7 வயது சிறுவனுக்கு எய்ட்ஸ் ஊசிபோட்ட அரசுபஸ் டிரைவர்" - தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்

x

திருவண்ணாமலை அருகே, மகனுக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோரை, போலீசார் அப்புறப்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஈச்சங்குப்பம் பகுதியை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்வகுமார் என்பவர், அதே பகுதியில் மருத்துவம் பார்ப்பதாக கூறப்படுகிறது. ஏழுமலை என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை, செல்வகுமார் விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஏழுமலை மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு பழிவாங்கும் விதமாக, ஏழுமலையின் மகனான வெங்கடேச பெருமாள், வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த செல்வகுமார், ஊசி செலுத்தியுள்ளார். இந்த தகவல் தெரிந்து ஏழுமலை தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், வெங்கடேச பெருமாளுக்கு ஊசி போட்ட இடத்தில் கட்டி வந்ததை அடுத்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை, செல்வகுமார் செலுத்திய ஊசி மூலமே தனது மகனுக்கு எய்ட்ஸ் வந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மனைவி மற்றும் மகனுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்