பாதி வழியில் பழுதாகி அடுத்தடுத்து நின்ற அரசு பேருந்துகள் - நடு வழியில் தவித்த பயணிகள்

x

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் அரசு பேருந்து அடுத்தடுத்து பழுதாகி பாதி வழியில் நின்றதால், பயணிகளும், மாணவ, மாணவிகளும் தவித்தனர்.

நெல்லையிலிருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி சென்ற மற்றொரு பேருந்தும் அத்தியூத்து அருகே அடுத்தடுத்து பழுதாகி நின்றன.

இதில், ஆலங்குளத்தில் வந்த பேருந்தின் சக்கரத்தில் இருந்து நட்டுகள் கழன்று விழுந்ததால் அந்த பேருந்து நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து 2 பேருந்துகள் நின்றதால் பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சாலையோரம் காத்திருந்தனர்.

அரை மணி நேரத்துக்குப் பிறகு அந்த வழியாக வந்த மாற்றுப் பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே, பேருந்துகள் பழுதாகி நிற்பதை செய்தி சேகரிக்க சென்ற நிருபரிடம் இருந்து, பேருந்தின் ஓட்டுனர் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சென்று, சாலையில் கழன்று விழுந்த நட்டுகளை தேடிக் கண்டுபிடித்து வந்தார்.

இந்நிலையில், பழுது நீக்கப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்