பிரதமரை சந்தித்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை | நெகிழ்ச்சி ட்விட் | PMModi |sundar pichai

x

கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது. விருது வழங்கும் விழாவில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால், அந்த விருது இந்திய தூதரகம் மூலம் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா வந்த சுந்தர் பிச்சை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார். இதனை அடுத்து டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில், பிரதமர் மோடியை மரியாதை நியமித்தமாக சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருவதை பார்ப்பதாகவும் வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குவதாகவும் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்