சென்னையில் டிராபிக் ஜாம்-க்கு குட்பை..! இனி சொய்ன்னு பறக்கலாம்... அடியோடு மாறப்போகும் போக்குவரத்து

x

சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில், அலுவல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, 621 கோடி ரூபாய் மதிப்பில் தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே 3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை வாகனங்கள் கடுமையான நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ஏற்கனவே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைந்துள்ள பகுதியிலேயே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில், நான்கு வழிச்சாலையாக மேம்பாலம் அமைக்க திட்டமிடபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்