1 வாரம் வெயிலுக்கு குட்பை.. தமிழ்நாட்டுக்கு ஜில்லுனு ஒரு வானிலை அப்டேட்..!

x

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நாளை முதல் 9-ம் தேதி வரை, ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்