சென்னை டிராபிக் ஜாம்முக்கு குட் பாய் - வருகிறது புதிய திட்டம் | Traffic | Chennai | New Scheme

x

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பின்படி, தென் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை எண்ணூர் மற்றும் காட்டுப்புள்ளி துறைமுகங்களுடனும், அண்டை மாநிலங்களுடனும் இணைத்து, அதன் மூலம் வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த 'சென்னை எல்லை சாலை திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சென்னை எல்லைச் சாலையானது 132 புள்ளி 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஆறு வழி இரட்டை பாதையாக, இருபுறமும் இருவழி சேவை சாலைகளுடன், 15 ஆயிரத்து 626 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் சென்னை நகருக்குள் வாகன நெரிசலை குறைப்பதால், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும் எனவும், இத்திட்டத்திற்காக தற்போது வரை 550 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்