பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன சின்ன வெங்காயம் | Onion

x

நெல்லையில், வரத்து அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை குறைந்தை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது கிலோ 90 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது. முதல் தர வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், 2ம் தர சின்ன வெங்காயம் 85 முதல் 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது கடந்த வார விலையுடன் ஒப்பிடுகையில் 50 ரூபாய் விலை குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்