சுற்றுலா பயணிகளுக்கு குட்நியூஸ்.. நாளை வண்டலூர் பூங்கா இயங்கும்

x

கோடை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் பூங்காவிற்கு நாளை விடுமுறை இல்லை என்றும், பார்வையாளர்களுக்காக நாளை திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் பிள்ளைகளுடன் மக்கள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனிடையே வண்டலூர் பூங்காவிற்கு செவ்வாய்கிழமை வார விடுமுறை நாளாக உள்ள நிலையில் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது பூங்கா நிர்வாகம். பார்வையாளர்களின் நலன் கருதி பூங்கா செவ்வாய்கிழமையான நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்