குறைய தொடங்கிய காய்கறி விலை மக்களுக்கு Good News

x

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சந்தையில், காய்கறிகளின் விலை கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 125 முதல் 135 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை 30 ரூபாய் குறைந்து 90 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 10 ரூபாய் குறைந்து 55 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்