சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பம்பையில் காத்திருக்கும் நற்செய்தி | SABARIMALA | KERALA

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பம்பைக்கு நெரிசல் குறைவான நேரத்தில் 3 பேருந்துகளும், நெரிசல் அதிகமான நேரத்தில் குறைந்தபட்சம்10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலையில் தரிசனம் முடிந்த பக்தர்களுக்காக பம்பையில் நெரிசல் இல்லாத நேரங்களில் குறைந்தது 3 பேருந்துகளும், நெரிசல் அதிகமான நேரங்களில் குறைந்தபட்சம் 10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கேஎஸ்ஆர்டிசி முன்பதிவு அலுவலகம் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். நிலக்கல்லில் வாகன நிறுத்துமிடத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடிக்கவும், ஒப்பந்ததாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com