ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..? 'இனி தைரியமா இறங்கி விளையாடுங்கப்பா..'

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதற்காக காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதாக இருக்க கூடாது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com