DRO-விடம் ஒப்படைக்கப்பட்ட தங்க கவசம் - தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது | Devar golden armor

x

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுபடி தேவர் தங்க கவசம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன்னில் தேவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது.

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோரிடம் வங்கி மேலாளர் ஒப்படைத்தார். இதனையடுத்து 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசமானது மதுரை, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் வருவாய்த்துறையினரின் முன்னிலையில் எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர், தங்க கவசம் நினைவிட பொறுப்பாளர் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து நினைவிடத்தில் பூஜைகள் செய்ய பட்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடபட்டது


Next Story

மேலும் செய்திகள்