ரூ.44 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை | Gold Rate

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து, 43 ஆயிரத்து 600 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 450 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 73 ரூபாய் 10 பைசாவாக விற்பனையாகிறது. அமெரிக்க வங்கித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில்,

சர்வதேச முதலீடுகள் பங்கு சந்தைகளில் இருந்து தங்கத்திற்கு மாறி வருகின்றன. இதனால் கடந்த எட்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்