பெருங்குடலில் தங்கப் பவுடர்.. அதிரடி காட்டிய சுங்கத்துறை அதிகாரிகள்

x

துபாயில் இருந்து ஐதராபாத் விமான நிலையத்திற்கு 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கப் பவுடரை நூதன முறையில் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு பயணியை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவருடைய வயிற்றில் கேப்சுல்கள் வடிவத்தில் மர்ம பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அந்த பயணி பெருங்குடலில் மறைத்து கடத்தி வந்த கேப்சூல்களை வெளியில் எடுத்த அதிகாரிகள், அவற்றை அறுத்து பார்த்தபோது உள்ளே தங்கப் பவுடர் இருப்பது கண்டுபிடித்தனர். அவற்றின் மதிப்பு 42 லட்சம் ரூபாயாகும். தங்க பவுடரை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்