DVD பிளேயருக்குள் தங்க தகடுகள்! - விமான நிலையத்தில் சிக்கிய பயணி - சென்னையில் பரபரப்பு

x

சென்னை விமான நிலையத்தில், டிவிடி பிளேயர் மூலம் தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது டிவிடி பிளேயர் மூலம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர். இதேபோல், துபாயில் இருந்து வந்த விமானத்தில், உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த மற்றொரு பயணியும் கைது செய்யப்பட்டார். இருவரிடம் இருந்தும் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 910 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்