“வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது..” - துணைவேந்தர் மாநாட்டில் ஆளுநர் பரபரப்பு பேச்சு

x

முதலீட்டாளர்கள் நாம் கேட்பதாலோ அல்லது நாம் சென்று பேசுவதாலோ வரமாட்டார்கள் என உதகையில் நடைபெற்ற துணைவேந்தர் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற துணைவேந்தர் மாநாட்டில் ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது பேசிய ஆர்.என்.ரவி, மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கும் சூழலை உருவாக்க வேண்டும் என கூறினார். முதலீட்டாளர்கள் நாம் கேட்பதாலோ அல்லது நாம் சென்று பேசுவதாலோ வரமாட்டார்கள் என்றும், அவர்கள் கடுமையாக பேசுபவர்கள் என்றும், நாட்டில் பல மாநிலங்கள் இதை செய்வதாக ஆளுநர் ரவி குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு திறமையான, பொருத்தமான திறமையான மனித வளத்தை உருவாக்குவது அவசியமான அம்சம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்