GoFirst விமான நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம்... 55 பயணிகளை ஏற்றாமல் விட்டுவிட்டு சென்ற சம்பவம் - இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி
ஜனவரி 9 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட்ட Go First விமானம், 55 பயணிகளை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றது. பயணிகள் உடமையை மட்டும் விமானம் ஏற்றிச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக Go First நிறுவனம் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காத நிலையில், அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாயை இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அபராதமாக விதித்துள்ளது. பயணிகளை விமானத்தில் ஏற்றுவது தொடர்பாக Go First விமானத்தின் பணிக்குழு, வர்த்தக பணியாளர்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் குழு இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லை எனவும் விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழிக்காட்ட போதிய நடவடிக்கைகளை விமான நிறுவனம் எடுக்கவில்லை எனவும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Next Story
