களைகட்டிய அம்மன் கோவில் மாம்பழத் தேரோட்டம் - மாம்பழங்களை அள்ளி அள்ளி வீசிய கொடையாளர்கள்.. பறந்து பறந்து கொண்டு பிடித்த பக்தர்கள்

x

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோவில் மாம்பழத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்ம 16ம் தேதி காப்புக்கட்டப்பட்டு தினமும் அம்பாள் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வலம் வந்த வீதிகளின் மாடங்களிலிருந்து கொடையாளர்களால் பக்தர்களை நோக்கி மாங்கனிகள் வீசப்பட்டது. அதை பக்தர்கள் அம்மனின் அருள்பிரசாதமாக எண்ணி பெற்றுச்சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்