உள்ளாடைகளில் கடவுளின் படங்கள்.. அமேசான் எதிராக புகார் அளித்தவர் மீது விசாரணை!

x

மதுரையில் அமேசான் நிறுவனம் மீது மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகாரளித்த வழக்கறிஞரிடம் சைபர் க்ரைம் போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துக்குமார். இவர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் அமேசான் நிறுவனம் மீது புகார் ஒன்றை அளித்தார்.

அதில், கடந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது இந்து கடவுள்களின் புகைப்படங்களை அமேசான் நிறுவனம் அவதூறாக வெளியிட்டது என்றும், ஆண் மற்றும் பெண்கள் அணியும் உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை நிறுவனம் அச்சிட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நம் நாட்டின் கொடியினை காலணிகளில் அச்சடித்தும், லடாக்கை சீனாவின் வரைபடத்தில் சேர்த்து வெளியிட்டது போன்ற சர்ச்சை செயல்களில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என புகாரளித்திருந்தார்.'

இதனடிப்படையில், வழக்கறிஞரை ஏற்கனவே நேரில் வரவழைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்