"2023ல் கோலிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்" முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உருக்கம்
2023ம் ஆண்டு உலகக்கோப்பையை விராட் கோலிக்காக இந்திய வீரர்கள் வெல்ல வேண்டும் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விருப்பம் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சேவாக், கடந்த 2011ம் ஆண்டு சச்சினுக்காக உலகக்கோப்பையை வெல்லும் நோக்கில் இந்திய அணி விளையாடியதாகவும், சச்சினுக்காக வென்று கொடுத்ததாகவும் கூறினார். இதேபோல், இந்த ஆண்டு கோலிக்காக கோப்பையை வெல்லும் நோக்கில் வீரர்கள் விளையாட வேண்டும் என சேவாக் வலியுறுத்தி உள்ளார்."2023ல் கோலிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்" முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உருக்கம்
Next Story
