இரவில் தப்பி ஓடிய சிறுமிகள் - காஞ்சியில் காணாமல் போனவர்களை திருச்சியில் மீட்ட போலீஸ்

x

காஞ்சியில் காணாமல் போனவர்களை திருச்சியில் மீட்ட போலீஸ்

காஞ்சிபுரம் அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 6 சிறுமிகள் தப்பியோடிய விவகாரத்தில், அனைவரையும் போலீசார் மீட்டுள்ளனர். காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் தாத்திமேடு பகுதியில் அன்னை சத்யா குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு பாதுகாவலரின் அறையை பூட்டி விட்டு 6 சிறுமிகள் இரவில் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், 5 சிறுமிகளை மீட்ட போலீசார், ஒரு சிறுமியை தீவிரமாக தேடி வந்த நிலையில், திருச்சியில் தங்கியிருந்த அவரை தேடிப்பிடித்து மீட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்