வீடியோ காலில் வந்த வேறொரு பெண்... ஆத்திரத்தில் காதலனின் வீட்டைக் கொளுத்திய காதலி...! - அதிர்ச்சி சம்பவம்
காதலனுக்கு அழைத்த போது செல்போனில் மற்றொரு பெண் பதிலளித்ததால், காதலி தனது காதலனின் வீட்டை எரித்து பஸ்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. டெக்சாஸைச் சேர்ந்த செனய்டா மேரி சோடோ என்ற 23 வயது பெண் நள்ளிரவில் தனது காதலனின் வீட்டிற்குள் புகுந்து, பொருட்களைத் திருடியதுடன், வீட்டை தீ வைத்து கொளுத்தியுள்ளார்... இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சோடோவைக் கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், சோட்டோ தனது காதலனுக்கு வீடியோ கால் செய்த போது, மற்றொரு பெண் பதிலளித்ததால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த மற்றொரு பெண் காதலனின் உறவினர் என்பது பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Next Story
