காதலி பேச மறுத்ததால் விரக்தி- காதலி வீட்டின் முன்பு தீக்குளித்து உயிரை விட்ட இளைஞர்

x

விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் தேவகுமார்.

துபாயில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த இவர் தன் சொந்த ஊரைச் சேsர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில், தனது தந்தை தன் திருமணத்திற்கு பெண் பார்த்து கொண்டிருப்பதை அறிந்த தேவகுமார், தனது காதலை வீட்டில் தெரிவித்துள்ளார்.

பின்னர் காதலியை சந்திக்க சென்றிருக்கிறார் தேவகுமார்.

அப்போது அவரின் காதலை ஏற்க மறுத்த காதலி, தன்னுடன் பேசுவதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்.

இதனால் மனமுடைந்த தேவகுமார் தனது காதலியின் வீட்டின் முன்பாக தன் மீது மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தேவகுமாரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்