முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி - வெற்றிகரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை

x

அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி டானியாவிற்கு இன்று காலை 8 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு, சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்ததையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் சிறுமி டானியாவையும், அவரது குடும்பத்தினரையும் அமைச்சர் நாசர் நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து டானியாவின் தாயார், முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் டானியாவை நேரில் வந்து சந்திப்பதாக உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்