+2 தேர்வில் 590 மதிப்பெண் பெற்று தேர்ச்சி - ஆடு மேய்த்த தந்தைக்கு ஓடிச்சென்று ஸ்வீட் கொடுத்த செல்ல மகள் - கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் - சங்கீதா தம்பதிகளின் மகள் மோனிகா,அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த முடிவுகளை தெரிவிக்க மாணவி மோனிகா தனது தந்தை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று தந்தைக்கு இனிப்பு வழங்கினார். 12 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு 590 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாக இனிப்பு வழங்கி தெரிவித்துவிட்டு, பிறகு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.


Next Story

மேலும் செய்திகள்