இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

x

மெலோனி தலைமையிலான தேசிய சகோதரத்துவ கட்சி கடந்த மாதம் நடந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து, மெலோனி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2ம் உலகப் போருக்குப் பின் இத்தாலியில் தீவிர வலது சாரிகள் ஆதரவுடன் ஆட்சியமைவது இதுவே முதன்முறை.

அந்நாட்டில் நிலவிய பொருளாதார சிக்கல்களால் பிரதமராக இருந்த மரியோ ட்ராகி பதவி விலகவே, தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மெலோனி வெற்றி பெற்றார்.

பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட 45 வயதான மெலோனி, லீக் கட்சியின் ஜியான்கார்லோ ஜியோர்கெட்டியை பொருளாதார அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராக அன்டோனியோ தஜானியையும் நியமித்தார்.


Next Story

மேலும் செய்திகள்