இஞ்சி விலை இவ்ளோவா..? தக்காளியை விட பல மடங்கு உயர்வு

திருவாரூரில் வரத்து குறைவு காரணமாக இஞ்சி ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்துடன் இருப்பதால் சில்லறை வியாபாரிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு காரணமாக, காய்கறிகள் வாங்கும் அளவை இல்லத்தரசிகள் குறைத்துக் கொண்டனர். காய்கறி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com