சென்னை கடற்கரையில் திடீரென எழுந்த ராட்சத அலைகள் மாயமான மாணவர்கள் - பரபரப்பு சம்பவம்

x

சென்னை நீலாங்கரை அருகே, கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி, கல்லூரி மாணவர்கள் இருவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவ கோட்டையை சேர்ந்த திலக்சன் மற்றும் நாகையை சேர்ந்த சஞ்ஜித் ஆகிய இருவரும் சென்னையில் தங்கி, தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர்.

இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் உள்ள கடலில் குளித்துள்ளனர்.

அப்போது திடீரென உருவான ராட்சத அலையில் சிக்கி, மாணவர்கள் இருவரும் மாயமாகினர்.

தகவலின் பேரில் வந்த கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மீனவர்கள், நீரில் மூழ்கிய மாணவர்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நாகையை சேர்ந்த சஞ்ஜித்தின் உடல், கானாத்தூர் ரெட்டி குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், திலக்சனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்