காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரின் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தனது அனைத்து பதவியையும் ராஜினாமா செய்தார்.
கட்சியின் மூத்த தலைவர், அகில இந்திய அரசியல் விவகார குழு உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் என பதவி வகித்து வந்த குலாம் நபியின் பதவி விலகல் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். உடல்நிலை காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக ஆசாத் தரப்பில் கூறப்பட்டாலும், தேசிய அளவில் மதிப்புடைய உடைய தனதுக்கு, மாநில அளவில் தலைவர் பதவி வழங்கியதால் ஏற்பட்ட மனகசப்பால், பொறுப்புகளில் இருந்து விலகியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
குலாம் நபி ஆசாத்திற்கு நெருக்கமானவர்களும் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர். கட்சி தலைமை மீது இருந்த அதிருப்தியும் ஆசாத் விலகுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.