"உக்ரைனில் இருந்து உடனே வெளியேறுங்கள்" - இந்தியர்களுக்கு கடைசி எச்சரிக்கை

x

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பாதுகாப்பு நிமைமை மோசமடைந்து வருவதைக் கருத்திக் கொண்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து உக்ரைன் வாழ் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தற்போது உக்ரைனுக்கு யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்