"பெண்ணை தவறாக பேசும் தலைவருக்கு Z பிரிவு பாதுகாப்பா"? -விரைவில் களத்தில் சந்திப்போம்- காயத்ரி ரகுராம்

x

ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் தலைவருக்கு Z வகை பாதுகாப்பு அளிப்பதா என நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் தொழிலையும், பெயரையும் கெடுத்ததற்கு நன்றி என்றும், தனது 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு, என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி என்று கூறிய அவர், விரைவில் களத்தில் சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு அளிப்பதா என வினவியுள்ள காயத்ரி ரகுராம், நன்றி மோடி ஜி தங்களை அப்பாவாக பார்த்ததாகவும் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக அவர், பாஜகவில் இருந்து விலகுவதாக அனுப்பிய ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்