48 வயதில் முதல் குழந்தை - கர்ப்பத்தை அறிவித்த கவுண்டமணி பட நடிகை

x

48வது வயதில் தாய்மை நிலையை அடைய போவதாக நடிகை ஷர்மிலி நெகிழ்ந்துள்ளார். ஆவாரம்பூ படத்தின் மூலம் பிரபலமான ஷர்மிலி, கவுண்டமணியுடன் 27 படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை வனிதா விஜயகுமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை பகிர்ந்து நெகிழ்ந்தார். 40 வயதில் ஐடி துறையைச் சேர்ந்தவரை திருமணம் செய்துக்கொண்டதாகவும், இப்போது சட்டம் படித்துக் கொண்டிருப்பதாகவும் ஷர்மிலி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்