பறந்து வந்து பவன் கல்யானுக்கு மாலை - ஓங்கி பளார் விட்ட பெண் இன்ஸ்பெக்டர்

x

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில், ஜனசேனா கட்சி தொண்டரை பெண் காவல் ஆய்வாளர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காளஹஸ்தியில் காவல் ஆய்வாளர் அஞ்சு யாதவ் மீது புகார் அளிப்பதற்காக பவன் கல்யாண் ரேணிகுண்டா விமான நிலையம் வந்து அடைந்தார். விமான நிலையத்திற்கு வெளியே அவரை ஏராளமான கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது கட்சி தொண்டர் ஒருவர் கிரேனில் பறவை காவடியாக வந்து பவன் கல்யானுக்கு சால்வை மாலை அணிவித்தார். அந்த தொண்டரை, அஞ்சு யாதவ் கன்னத்தில் அறைந்தார். இதனிடையே திருப்பதி எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த பவன் கல்யாண், காளஹஸ்தி காவல் ஆய்வாளர் அஞ்சு யாதவ் செயல் குறித்து, எஸ்பி பரமேஸ்வர் ரெட்டியிடம் புகார் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்