குப்பை கிடங்கில் தீ விபத்து விவகாரம் : பேரூராட்சி முன்பு கவுன்சிலர்கள் தர்ணா - மதுரையில் பரபரப்பு

x

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குப்பை கிடங்கில், தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக, திமுக - அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குப்பை கிடங்கை முறையாக பராமரிக்காததால், தீ விபத்து ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டிய அதிமுக கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற திமுக எம்எல்ஏ வெங்கடேசன், அதிமுக கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அதிமுக கவுன்சிலர்களை திமுக பிரமுகர் தாக்க முயன்றதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Next Story

மேலும் செய்திகள்