மேயரை வரவிடாமல் தடுத்த காங். கவுன்சிலர்கள்...கொழுந்துவிட்டு எரியும் கேரள குப்பைக்கிடங்கு விவகாரம்... ஆளுங்கட்சி உடன் காங்கிரஸ் மோதல்

x
  • கொச்சி பிரம்மபுரம் குப்பைகிடங்கு தீ விபத்து விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டு ஆளும் கட்சியினருடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • கொச்சியில் பிரம்மபுரம் குப்பைக்கிடங்கு தீ விபத்து பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
  • இந்நிலையில், ஆளும் கட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
  • மேயர் அனில்குமார் பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர். மேலும், கவுன்சிலர் கூட்டத்திற்கு வந்த மேயரையும் முற்றுகையிட்டு தடுத்தனர்.
  • அங்கிருந்து மேயரை மீட்டு போலீசார் அழைத்துச் சென்றனர்.
  • அப்போது, போராட்டக்காரர்களுக்கும், ஆளும் கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், தடுக்க முயன்ற போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
  • இதில், பெண் கவுன்சிலர்கள் காயமடைந்த நிலையில், காவலர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டினர்.
  • அதே நேரத்தில், மேயர் அலுவலக கதவின் ஜன்னல்களை போராட்டக்கார‌ர்கள் உடைத்தனர்.
  • இதனிடையே, 5 நிமிடம் மட்டும் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்