கஞ்சா வியாபாரி வீட்டில் ரெய்டு - கஞ்சா இருக்கும் என நினைத்த போலீஸ்-க்கு காத்திருந்த அதிர்ச்சி

கஞ்சா வியாபாரி வீட்டில் ரெய்டு - கஞ்சா இருக்கும் என நினைத்த போலீஸ்-க்கு காத்திருந்த அதிர்ச்சி

மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். பழங்காநத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் உள்ள, ஜெயசூரியபிரகாஷ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஜெயசூரியபிரகாஷ் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com