பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் | Pocso | Gundass

x

ராமநாதபுரத்தில், பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ வழக்கில் கைதான நபர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு பயிலும் 10 வயது மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவர், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். முத்துமணி மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், முத்துமணி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், குற்றவாளி முத்துமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்