5 ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டி வந்த ரவுடி கைது.. இவர் யார் என்று தெரிகிறதா?

சென்னை ஓட்டேரி, கொசப்பேட்டை,எட்வர்ட் பார்க் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார், அதே பகுதி யைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கடந்த 2018 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சதீஷ்குமார் தலைமறைவானார். இந்நிலையில் அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் சதீஷ்குமார் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புளியந்தோப்பு துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர். சதீஸ்குமார், அமைச்சர் சேகர்பாபுவின் மகளை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com