பாகிஸ்தானில் இந்துக்கள் கோயிலை குறிவைக்கும் கும்பல்..ட்ரெண்டிங் காதல் ஜோடி காரணமா? |பகீர் சம்பவங்கள்

x

கராச்சியில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் அமைந்திருந்த 150 ஆண்டுகள் பழமையான "மாரி மாதா" கோயில் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. புல்டோசர்களைக் கொண்டு கோயில்கள் இடிக்கப்பட்டன. அப்பகுதியில் வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிந்து மாகாணத்திலும் கோயில் ஒன்று ராக்கெட் லாஞ்சரால் தாக்கப்பட்டது. சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சீமாவுக்குத் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், அவருக்கு பப்ஜி விளையாட்டின் மூலம் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞருடன் காதல் மலர்ந்து, காதலுக்காக நாடு கடந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவ்விவகாரத்தால் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஆயுதமேந்திய கொள்ளை கும்பல் மிரட்டல் விடுத்து வந்த நிலையில், காஷ்மோர் நகரில் உள்ள கோயில் மீது மர்ம நபர்கள் ராக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இத்தாக்குதலால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்து கோயில்கள் குறி வைக்கப்படுவதால் அங்குள்ள சிறுபான்மையின இந்துக்கள் அச்சம் அடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்