கங்னம் ஸ்டைல் பாடல் உருவெடுத்த தினம் இன்று.

x

தென் கொரியாவின் புகழ் பெற்ற ராப் பாடகரான பி ஸை (Psy) என்று அழைப்படும் பார்க் ஜா சாங்கிற்கு, உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். கொரிய மொழி அறியாத பல கோடி பேர் அவரின் ராப் பாடல்களை யூடியூபில் பார்த்து மகிழ்கின்ற னர்.

2012 ஜூலை 15ல், பி ஸை, கங்கனம் ஸ்டைல் என்ற ராப் பாடலை, எழுதி, இயக்கி பாடி வெளியிட்டார். மெஹா ஹிட்டடித்த இந்த வீடியோவை உலகெங்கும் பல கோடி

பேர் பார்த்து ரசித்தனர். 2012ன் இறுதியில் பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 30 நாடுகளில் நம்பர் ஒன் ராப் பாடலாக உருவெடுத்தது.

தென் கொரிய தலைநகரான சியோல் நகரின் ஒரு பகுதியான கங்னம் மிக நவீனமான, நளினமான மக்களை கொண்ட பகுதியாகும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் ஒரு பகுதியான பெவெர்லி ஹில்ஸ் மற்றும் ஹாலிவுட் பகுதிகளுக் கு இணையாக கருதப்படுகிறது.

இந்த பகுதியை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கங்னம் ஸ்டைல் பாடல், ஒரு மிகச் சிறந்த தோழியை பற்றி விவரிக்கிறது. கங்னம் ஸ்டைலை காபியடிக்கும்

போலிகளை கிண்டல் செய்கிறது.

2012 நவம்பரில் ஜஸ்டின் பீபர் என்ற பாடகரின் பேபி வீடியோவை முந்தி, உலகின் நம்பர் ஒன் யூடியூப் வீடியாவாக உருவெடுத்தது. டிசம்பரில் 100 கோடி பார்வையாளர்களை ஈர்த்து, சாதனை படைத்தது.

இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு உலகின் நம்பர் ஒன் யூடியூப் விடியோவாக கங்னம் ஸ்டைல் தொடர்ந்தது. 2015 டிசம்பரில் இதை ஃபேடெட் (Faded) என்ற வீடியோ முந்தியது.

தற்போது வரை கங்கனம் ஸ்டைல் வீடியோ, 460 கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இவர்களில் பலரும் இதை மீண்டும் மீண்டும் பார்து ரசிப்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதுவரை 2.5 கோடி லைக்குகளை பெற்றுள்ளது.

கங்னம் ஸ்டைல் வீடியோ, யூடியூபில் நம்பர் ஒன் வீடியோவாக உருவெடுத்த தினம், 2012 நவம்பர் 24.


Next Story

மேலும் செய்திகள்